Wednesday, October 22, 2014

கங்கையும் துருவனும்



அன்புள்ள ஜெ,

பிரயாகையை கங்கையிலிருந்து துவக்கியிருக்கிறீர்கள்விஷ்ணுபாதத்தில் துருவ 
மண்டலத்திலிருந்து வந்தவள் தானே அவள்ஆனால் கங்கை தான் துவக்கமென்றால் பகீரதனிடமிருந்து கூடத் துவங்கியிருக்கலாமேஏன் துருவன்பிரயாகையின் முதல் வரியிலேயே பதிலும் தந்து விட்டீர்கள்.

'விளக்க முடியாத விருப்புகளாலும்புரிந்து கொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் ஆனது வாழ்க்கை'.

 இந்த நிலையின்மையப் புரிந்து தெளிந்து நிலைபேறடைந்தவன் தானே துருவன்கங்கையும் அப்படித் தானேஎப்போது பிரிவாள்எப்போது இணைவாள்எப்போது விழுவாள்எப்போது விரைவெடுப்பாள் என்பதை விளக்கவே முடியாதே!

சமீபத்தில் ஒரு தொடர் பகுதிக்காக இவ்வளவு காத்திருந்ததில்லைதுருவன் கதையை பல  முறை கேட்டிருந்த போதும்பெருநிலை 1 அதை முற்றிலும் வேறோர் திசையில் திறந்துவிட்டதுஉத்தானபாதன் சுநீதியை வெறுப்பது என்பதற்கு தரும் விளக்கம், 'பேரன்பைப் போல சலிப்பூட்டுவது ஏதுமில்லை'. சலிப்பின் குழந்தை தானே வெறுப்புதன் மீதான வெறுப்பே துருவனின் மீதான வெறுப்பாக மாறுகிறது

உத்தானபாதன் மட்டுமல்லநாமும் தான் நீதிக்கும்இச்சைக்குமிடையே அல்லாடிக கொண்டிருக்கிறோம்என்றுமே நாம் நீதியை வெறுக்கத் தான் செய்கிறோம்உதாரணத்திற்கு நள்ளிரவு நேரத்தில் ஒருவழிப் பாதையில் போகலாம் என்பது நம் இச்சைஅவ்வாறு செல்வதற்கு சிறந்த காரணங்களை எடுத்து தருவதிலும் நம் இச்சை சிறப்பாக செயல்படும்உதாரணத்துக்கு மிகவும் தாமதமாகி விட்டதுஇவ்வழியில் போனால் சீக்கிரம் சென்று விடலாம் என்றோஎவன் தான் தப்பு பண்ணல என்றோ நமக்கு சரி என்று தோன்றுகின்ற ஓர் காரணத்தை நம் இச்சை தயார் செய்து விடும்அவ்வாறன்றி இது தவறு என்று நீதிக்கு கட்டுப்பட்டு அவ்வழியில் செல்லாமல் நேர்வழியில் சென்றால் மனதெல்லாம்ச்சே... அந்த பாதையிலேயே சென்றிருக்கலாம்என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும்அதையே இங்கு உத்தானபாதனும் அனுபவிக்கின்றான்நீதியின் பாதையில் நாம் சென்று அடையும் எதன் மீதும் ஒரு வித கசப்பையே நாம் உணர்கிறோம்அதையே தான் துருவன் மீதும் அவன் உணர்கிறான்அதனால் தான் அவன் துருவனைத் தள்ளி விடுகிறான்மிக நுட்பமாக இவ்விடம் எழுதப் பட்டிருக்கிறதுதுருவன் விழப் போகையில் அவனைத் தாங்கிப் பிடிப்பது சுநீதிஆம் நாமும் ஆசையின்பாற்பட்டு வெறுத்தொதுக்கும் துருவன்களை நீதியே தாங்கிக் கொள்கிறது.

உண்மையில் இங்கு பரிதாபப் படவேண்டியது சுநீதியை அல்லசுருசியைத் தான்அவளுக்கு அங்கே மூலதனம் என்பது அவளின் அழகு தான்அதை மறைக்கவே அவள் அவனைத் தன் வசப்படுத்துகிறாள்இன்னும் இன்னும் என்று வேண்டிக் கொண்டே இருக்கிறாள்அடைந்த பிறகும் மீண்டும் மீண்டும் ஆசையை வளர்த்துகிறாள்எதையோ நிறுவ எண்ணுபவள் போல் வெறி கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறாள். உங்களின் 'நிலம்' சிறுகதை நினைவுக்கு வந்ததுஉண்மையில் உத்தானபதனை விட அலைகழிப்புகள் நிறைந்தவள் சுருசி தான்அவள் மண்ணில் காலூன்றி நிலைத் தன்மையை அறிந்து விட்டதாக உத்தானபாதன் கருதுகிறான்ஆனால் அது தவறு என்பதை நகர் நீங்கிப் போகும் துருவன் பின்னால் வராத சுநீதியைக் கண்டு உணர்ந்திருப்பான்முற்றிலும் மாறுபட்ட ஒருவனாக துருவன் போகும் போது அவனை முதலில் அவனிடம் ஆசி கேட்பவளும் சுருசி தான்சும்மாவா சொன்னார்கள் ஆசை வெட்கம் அறியாது என்று

சுநீதி என்றுமே நிலையாகத் தான் இருக்கிறாள்கணவன் தன்னிடம் வரும் போது மகிழ்வுடனிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறாள்உத்தானபாதன் தான் அவளிடம் கோபப்படுகிறான்பின்னர் குற்ற உணர்வால் அவளை சிறிதேனும் மகிழ்விக்கிறான்இந்த நிகழ்வுகளனைத்திலும்  தூய அன்பை மட்டும் பொழிந்து அவனை அனாயாசமாக வென்று செல்கிறாள் சுநீதிஅவள் நிலையாக இருந்ததால் தான் நிலை பேறு என்ற எண்ணம் சாத்தியமாகிறது துருவனுக்குதன் ஆன்மாவில் காறி உமிழ்ந்த தந்தையை ஓர் எளிய புன்னகையில் , தந்தையேமாமனிதர்களின் உள்ளம் செயல்படுவதை நீங்கள் உணர முடியாதுநான் இப்புவியில் யுகயுகங்களுக்கொருமுறை பிறப்பவன்மானுடம் என்றும் நினைத்திருக்கும் பெயர் நான்மானுடமும் இப்புவியும் காலத்தில் ஒரு வெற்றுக் குமிழியாக வெடித்தழிந்தாலும் எஞ்சி என்றுமிருப்பவன்ஒரு கண்ணிமைப்பால் அடையக்கூடுவனவற்றில் என்னைப்போன்றவர்களின் சித்தம் தங்காது.”, தண்டித்து கடந்து செல்கிறான்அதே புன்னகையோடு அவன் சுருசிக்கு அளிக்கும் ஆசி இன்னமும் நுட்பமானது.

'நிறைவடைகஎன்கிறான்ஒற்றை சொல்லில் அவளை அனைவருக்குமே அறிவித்து செல்கிறான்கம்பர்ராமனிடத்தில் காட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொன்ன கைகேயியிடம் ராமன் சொல்வதாக எழுதிய இடம் நியாபகத்துக்கு வந்தது.

மன்னவன் பணி அன்றாகிலும் நும் பணி மறுப்பேனோ என
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்"

ராமனுக்கு ஆணை அளிப்பது யார் என்று நன்றாகத் தெரிந்திருக்கிறதுஅதையே கம்பர் குறிப்பாக, மன்னவன் ஆணை இல்லாவிட்டாலும் உம்முடைய ஆணை என்றால் கூட நான் செய்வேன்என்கிறான்ராமனும் தந்தையிடம் விடை வாங்காமல் அவன் இருக்குமிடம் நோக்கி பணிந்து செல்கிறான்இங்கே முடிவெடுத்த பின்னர் துருவன் அதைக் கூட செய்வதில்லைநேரடியாக கிளம்பி விடுகிறான்யாருடைய அனுமதிக்கும் காத்திருக்கவில்லை.

உண்மையில் இவ்விரு அத்தியாயங்களிலும் தெறிப்பது வஞ்சம் தான்சுநீதியின் மீதான சுருசியின் வஞ்சம்எதனால் என்பதற்கு பதில் ஒன்றே ஒன்று தான்சுநீதி நிலையாக இருக்கிறாள்அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கப்படுகிறதுஇவளோ அந்த மகிழ்ச்சியின் போதெல்லாம் தோற்கடிக்கப் படும் உணர்வையே பெறுகிறாள். துருவனோ வஞ்சத்தினால் அதை வெல்லும் வகையறிந்து செல்கிறான்.

உண்மையில் பாரதப் போருக்கு வஞ்சம் தான் அச்சுதுரோணரின் வஞ்சத்தின் விளைவு தான் திரௌபதிவஞ்சத்தைஅறத்தை மறைக்கும் ஆசையைச் சொல்ல துருவன் கதையத் தேர்ந்தெடுத்தது அபாரம் ஜெதுருவனின் மாற்றம் சொல்லிய இடங்கள் எல்லாம் மிரட்டி விட்டீர்கள்பிரயாகை ஆரம்பத்திலிருந்தே கொந்தளிப்புடன் பாயத்துவங்கி விட்டதுகாத்திருக்கிறேன் அதனுள் மூழ்க.

அன்புடன்,
அருணாச்சலம்நெதர்லாந்து.