Saturday, October 18, 2014

நுண்மையும் உக்கிரமும்




ஜெ சார்

மழைப்பாடலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். கேசவமணி எழுதிய மதிப்புரையும் சுரேஷ் எழுதிய மதிப்புரையும் ஆழமாக வாசிப்பதற்கு எனக்கு உதவிசெய்தன. நானறியாத பல கோணங்களை எனக்குக் காட்டின. விமர்சனங்கள் எதற்காக என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்தது. ஆனால் வெண்முரசு போன்ற ஒரு நாவலை வாசிக்க விமர்சனம் இல்லாமல் முடியாது என்று நினைத்துக்கொண்டேன்

மழைப்பாடலில் எனக்கு உக்ரமான இடங்களும் பிடித்திருந்தன. மென்மையான இடங்களும் பிடித்திருந்தன. மிக உக்ரமான இடங்கள் என்றால் ஐந்து இடங்கள்

1  ஓநாயை தேடி சகுனி போகும் இடம்

2 ரத்தமழை பெய்யும் இடம்

3 அஸ்தினபுரியில் வெள்ளம் வரும் இடம்

4. பைரவி நாயாக வரும் இடம்

5.கலி கண் திறக்கும் இடம்

இவையெல்லாமே புராணங்கள் போல உக்ரமாக இருந்தன. அதேசமயம் மெல்லிய காட்சிகள் சில இருந்தன. நுட்பமானவை. வண்ணதாசன் கதைகளில் அல்லது ஜானகிராமன் கதைகள் வருபவை. அவைதான் அதிகம். ஆயிரக்கணக்கில் என்று சொல்லலம். என்னுடைய மிகச்சிறந்த 5 என்றால் இவை

1. திருதராஷ்டிரன் ஏன் நகை அணிகிறான் என்று சொல்லும் இடம்

2. புயலில் திருதராஷ்டிரன் கையை ஒருபக்கம் காந்தாரியும் மறுபக்கம் விதுரனும் பிடிக்கும் இடம்

3.குந்தி கர்ணனைப்பற்றி பாண்டுவிடம் சொல்ல வந்து சொல்லமுடியாமல் போகும் இடம்

4விதுரன் குந்தியை கோயிலில் காணும் இடம்

5  தருமன் கடைசியாக தந்தையின் சிதைமுன் நிற்கும் இடம்

ராஜாராம்


கேசவமணி மழைப்பாடல்பற்றி\