Tuesday, October 21, 2014

மானுடக்குழல்




ப்ரிய ஜெ,

நலம் தானே?

உங்களுடன் பேசி பலமாதங்கள் ஆகிவிட்டன.உங்கள் சிந்தனைக்கு இடையூறாகலாகாது என்றே நான் அழைக்கவில்லை.(என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன். விவேக் ஷன்பேக்கின் கதையை-'நம் வழியிலே நாம்' -தமிழாக்கம் செய்ய வாய்ப்பளித்து,மனதார பாராட்டினீர்கள்)

இன்னமும் நீலம் கருக்கலில் மனசை ஆக்கிரமித்தபடி....நீலம் குறித்து மனதில் பட்டதை நேற்று எழுதினேன்.தொலைவில் இருப்பதால் என் கைதட்டல் காதில் விழாது போகலாம்.ஆனாலும் தட்டியபடியே இருக்கிறேன். அண்மையில் தஞ்சைக்கு 'திருலோக சீதாராம்அவர்களின் புத்தக வெளியீடு விழாவிற்கு வந்திருந்தேன்.(அவர் என் 'மாமா தாத்தா')அவர் வாழ்க்கைசரிதம் எழுதும் முயற்சியில் இருக்கிறேன். உங்கள் அத்தனை முயற்சிகளுக்கும் இறையருள் விளங்கட்டும்்

உங்கள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் என் அன்பு

மோகன்ஜி


நீலம். நீலம்....

யமுனைக்காட்டு மூங்கில்கள் அலுத்ததாலோ என்னவோ,
யசோதாநந்தன்  தெற்கே நாகர்கோயில் வந்தான்.
கணுவுக்குகணு காவியம் ஊறிய மானுடனைத் தெரிந்தான்.
வேய்ங்குழலாய் அவனையாக்கி உதடுகளைப் பதித்தான்.
கண்ணனின் செம்பவளவாய்தான் தித்திருந்தது.

ஆசீர்வதிக்கப்பட்ட மானுடக்குழல் மோகனம் பொழிந்தது.
நீலம்பூரித்து பொங்கி எங்கெங்கும் நிறைத்த வேளை,
அப்புறமாய் வருவதாய் ராதாமாதவன் குழலை வைத்தான்.
விகசித்து காவியம் பொழிந்த அந்தக் குழலோ,
விக்கித்து விதிர்த்து,நீலம் பாரித்துப் போனது.

தனையிழந்து பித்தில் பிழன்ற மானுடக்குழலை,
தன்சலங்கை தனை சப்தித்து ராதையே எழுப்பினாள்.
நீ செய்யவோர் ஆயிரம் நூலுண்டு என்றே
கண்ணன் சூட்டிய பாரிஜாதமாலை கழற்றி,
அம்மானுடன் தோளுக்கு ஏற்றி மறைந்தாள்.

பர்சானி தேவதை காவலென்றே மானுடனும்,
பாகவத பரவசத்தை மேலும்பதிய அமர்ந்தான்.
காலத்தேரின் சுவடல்லவே அவன்? பாட்டையில்
படர்ந்த தூசல்லவே அவன்? தேருயரே
 பட்டொளிரும் ஜெயக்கொடி தான் அன்றோ