Wednesday, October 15, 2014

வண்ண்க்கடல் -ராமராஜன் மாணிக்கவேல்




வண்ணக்கடல்-01-ஜுன்-01-2014

ஒவ்வொரு நொடியும் யுகம்போலவும், ஒருவ்வொரு யுகமும் நொடிபோலவும் மாறும்  வாழ்வு அருளப்பட்டுள்ள வாழ்க்கையில் ஆடும் மானிடனுக்கு கையளவு நிலம் உலகம்போலவும், ஒரு உலகமே கையளவுபோலவும் தெரியும் விசித்திரம்தான் வாழ்க்கையை கடலாக்குகிறது.


நேற்றிரவுதுயிலாமல்மரத்தின்மேலிருக்கையில்எண்ணிக்கொண்டேன்.வீரன்வாழ்வுசிறிது.மன்னன்வாழ்வுஅதைவிடச்சிறிது.அவர்களைப்பாடிவாழும்பாணன்வாழ்வோகால்களைக்கஓடியும்காலடிநீளம்கடக்காதஎறும்புக்குநிகர்என…”


கையலவோ கடலளவோ மனிதன் அறிவும் அறியாமையும் போடும் போட்டிதான் வாழ்க்கை கடலின் அலைகள்.


இளநாகனின் அறிவும், பழையனின் அறியாமையும்அலைகளாகி வண்ணக்கடலின் முதல் அலையாகி வருகின்றது.


அறியாமையையின் அலை நகராமல் கடலை கொந்தளிக்க வைக்கிறது.அறிவின் அலை இருக்க இடம் இல்லாமல் அலைந்துக்கொண்டு இருக்கிறது.
வண்ணக்கடலின் முகவரியை இங்கு எழுதி வாசகரின் இதயங்களுக்கு அஞ்சல் செய்கிறார் ஆசிரியர் திரு.ஜெ..

நான்  என்ற நினைப்புதான் ஆதிநாகத்தின் தலையில் படமாக விரிந்தது. அதன் பின் நான்..நான் என்ற நினைப்பு தோன்றத்தோன்ற ஆதி நாகத்திற்கு தலையும் படமும் முளைத்துக்கொண்டே இருக்கிறது.
அறிவு உடைய இளநாகனுக்கு தோன்றும் நான் என்ற எண்ணமும், அறியாமை உடைய பழையனுக்கு தோன்றும் நான் என்ற எண்ணமும்தான் இந்த கடலின் பெரும் நடனத்திற்கு காரணம்.


அறிவு தன்னைக்கண்டு கொள்வது போலவே, அறியாமையும் தன்னைக் கண்டு இருப்பதுதான் வாழ்க்கையின் உச்சம் அவைகள் இரண்டும் தன் தன் வழியில் தான் தான் என்பதுதான் சரி என்று நினைப்பதுதான் உச்சத்தின் உச்சம்.
இளநாகன் ஊர் ஊராக ஓடுவதும், வழிநடை நட்புகளிடம் உண்வு உண்பதும் விதி என்றால், விதி என்பது எங்கோ இல்லை, அந்த கணத்தில் விழுந்து முளைக்கும் நானில் உள்ளது.
மூன்று செம்பு நாணயத்திற்கும், ஒருவேளை சோற்றுக்கும் வந்திருக்கும் கூட்டத்திற்கு இல்லாத நான் இளநாகனிடம் உள்ளது.அந்த நான்தான் அவனின் விதியாக உள்ளது.அந்த விதிதான் அவனை மாமதுரைக்கும், வடமதுரை மன்னன் உறவாக வந்துபோகும் அஸ்தினபுரிக்கும் அலைய வைக்கிறது.


பார்ப்பவர்களுக்குதான் அலை அலைவதுபோல் தெரிகிறது.அலைக்கு அதுதான் தருமம்.
இளம்பாணன் இளநாகனை அவன் தாய் பெரும்கடலின் அலையாக இருக்க பெற்று உள்ளாள்.அவனால் எப்படி பழையனின் சோறு திங்கமுடியும்.


இளம்நாகனை பாண்டவராகவும், பழையனை கௌரவர்களாகவும் கொண்டால் வண்ணக்கடலி்ன் முதல் அலை எப்படி உருவாகி செல்கிறது என்பதை அறியலாம்.
வெண்முரசு-மூன்றாம் நூல் வண்ணக்கடலில் எங்களை நீந்தவைக்கும்  ஆசிரியர் திரு.ஜெவுக்கு வாழ்த்தும் வணக்கமும்.