Friday, November 21, 2014

மனிதர்களின் மாற்றம்

அன்புள்ள ஜெ

வெண்முரசின் மிக விரைவான பகுதி என்றால் அது பிரயாகை தான்

எல்லாருக்கும் தெரிந்த கதைகள். ஆனால் இத்தனை வேகம் காரணம் கதைக்குப்பதிலாக அதற்குப்பின்னால் உள்ள மனநிலைமளைச் சொல்கிறீர்கள். மனநிலைகளை அல்ல. மனநிலை மாற்றங்களை

மனித மனதைப்பற்றி வைத்தியர் பாலைவனத்தில் சொல்லும் வரிகள் அனைத்தையும் இப்போது வந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கவேன்டியிருக்கிறது

மனம் என்பது மனித உடலுக்குள் இருக்கும் ஒரு பிரதிபலிப்பு. சூழலை அது காட்டிக்கொன்டே இருக்கிரது. ஆகவே மாறிக்கொன்டே இருக்கிரது. மனிதர்கள் நிலையானவர்கள் அல்ல அவரக்ள் மாறிக்கொன்டே இருக்கிறார்கள் என்ற வரியை ஒவ்வொரு கதைச்சந்தர்ப்பத்திலும் யோசித்துக்கொன்டிருக்கிறேன்

மகேஷ்