Tuesday, November 25, 2014

சதுரங்கம்




ஜெ

பிரயாகையின் மொழிநடை கறாராக இருக்கிறது. புராணம் அல்லது தொன்மத்துக்குரிய அணிகளுடன் இல்லை. இது என் மனப்பாங்காக இருந்தது ஆனால் கதை நீள நீள கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியது, இந்த நாவலின் உள்ளடக்கத்துக்குரிய மொழிதான் என்று. மிகக்கறாரான அரசியல்தான் இதில் உள்ளது. அதில் உணர்ச்சிகளுண்டு. அனால் அழகுபடுத்தல்களுக்கு இடமே கிடையாது

அரசியலின் இந்த ஆட்டம் அன்றைக்கு முதல் இன்றைக்கு வரை அப்படியேதான் இருக்கிறது.. இன்றைக்கு விதுரர் துரியோதனனை சாதுரியமாக முறியடிக்கிறார். இதை நான் என் அலுவலில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

இப்படிச் சொல்லலாம். இது ஒரு strategy ஒரு particular விஷயத்தை ஒருவர் முன்வைத்தார் என்றால் அதை total interest ஐ முன்வைத்து விலாவரியாக மறுக்கமுடியும். அதேபோல ஒரு grand plan ஐ யாராவது முன்வைத்தால் உடனே அதன் micro தேவைகளைச் சொல்லி அதையும் மறுக்கமுடியும்

எதையும் சபையில் மறுக்க முடியும். அங்கே லாஜிக் பார்த்தால் அபத்தமாகவே முடியும். அங்கே intuition கொண்டுதான் செய்யவேண்டும்

இந்த அத்தியாயத்தின் play அபாரம்


ராமச்சந்திரன்