Sunday, November 16, 2014

மறுபிறப்பு




அன்புள்ள ஜெ

சித்ரகரின் ராம சதகம் மூலம் ஒரு இழை, சகுனியின் மூதாதையர் மற்றும் சரிதம் பற்றிய உஷரரின் சுவடி இழை - செறிவுடன் இணைகிறது.(மூலக் கதைகளின் செவ்வியல் கிளைகளாக)

தெரியாதன, இன்னவென்று கூற முடியாதன, நடந்ததா என்று தற்போதைய நிகழ்வுடன் முரண் பட்டு கிடப்பன என விரிந்து கிடந்தாலும், அவைகள், மூலக் கதையுடன் சேரும் போது புதிய அழகான உத்தியாகிறது.

கிட்டத்தட்ட ஒரு இணைப் பிரபஞ்சம் போலவும், இது போன்ற பல நிகழ்வுகள் ஒத்தினைந்து (நிகழ்வுகளின் தொடுவானம் - Event Horizon) ஒரு பெரிய ஓவியத்தை முழுமை செய்வது போல உணர்வு. 

கதையின் வளியை (space) ஒரு புலமாக (field) ஆக  கொண்டால், நிகழ்வுகள் ஒரு துகளாக (particle) கற்பனை செய்து கொண்டால், எல்லா கதைகளின் சொல்லப் பட்ட சாத்தியங்களும் நிஜமே - என்னும் பரவச நிலைக்கு கொண்டு செல்கிறது. (ஒருவேளை நானே அதீதமாக கற்பனை செய்து கொண்டு விட்டேனோ?)

இறத்தலுக்கு மிக அருகே சென்று மீள்வது - துருபதனுக்கும் சகுனிக்குமாக  நிகழ்கிறது. ஒருபுறம் பாகீரதி - மறுபுறம் சிபி நாட்டின் பாலைவனம்.

பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) - ஒரு விபத்தில் வண்டியின் சகடத்தில் சிக்கிக் கொண்டு, வெகு நாள் மருத்துவ பாராமரிப்பில் இருந்து மீண்ட போது - முற்றிலும் வேறு மனிதராக - கணிதத்திலிருந்து கிறித்துவ ஆன்மீகத்திற்கு மாறி பணியாற்றினார் என்பதும் நினைவிற்கு வந்தது. சரி பார்த்துக் கொண்டேன் 



நன்றி
முரளி

அன்புள்ள முரளி
மறுபிறப்பு என்பது இதிலுள்ள பெரும்பாலான கதாபாத்திரங்கள்க்கு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இலக்குக்காக மட்டுமே மறுப்பிறப்பு எடுப்பது. சிகண்டி முதல்...
ஜெ