Sunday, January 18, 2015

வெண்முரசு விழா பற்றி



அன்பினிய ஜெயமோகன்,

"வெண்முரசு விழா ஏன் ?" நவம்பர் 4 பதிவை படித்தேன்.

முகமறியா எத்தனையோ மனங்கள் உங்கள் எழுத்தின் பின்னே இருக்கின்றன. வரும் வசை, எகத்தாளங்களை எல்லாம் யானையின் காலைக் கடித்துப் பார்க்கும் எறும்புகளாய்த்தான் பார்க்கிறோம். "நான் யானையக் கட்சிட்டேன் தெர்மா?" என்று பீற்றிக் கொள்ளும் எறும்புகளுக்கு என்ன மரியாதை என்று எல்லாருக்கும் தெரிந்தது தானே :D

மற்றபடிக்கு யானைக்குக் கிடைக்கும் பட்டம்,பரிவாரங்கள் குறைவறக் கிடைப்பது மகிழ்ச்சியாய் உள்ளது. குன்றாமல் தொடருங்கள். நாங்கள் இருக்கிறோம்.
(கொஞ்சம் பின் தங்கி விட்டேன். இம்முறை நீலத்தில் திளைந்தது  சற்று நீளமாகி விட்டது. ராதையை சுற்றி உள்ளவர்களின் பார்வையில் எந்தத் தடையும் இல்லாமல் போக முடிந்தது. உண்மையில் பிற கதை மாந்தர் வரும் போதுதான் கொஞ்சம் மூச்சு சீராகியது :) . அவர்களுடன் என்னைப் பொருத்திக் கொள்வது சுலபமாய் இருந்தது.

ஆனால் ராதை. பித்தின் பெருவெளியில் ஒப்புக் கொடுத்து சரணாகதி அடைந்தாலொழிய பிடிபடாத ஒருத்தியாக இருந்தாள். எப்படிப் பட்ட மனநிலையில் எழுதி இருப்பீர்கள் என்று பிரமிக்கத்தான் தோன்றுகிறது)
- சந்திரமோகன்