Thursday, January 22, 2015

திருவிழா


ஜெ,

பிரயாகை முடிவடைந்தபோது ஒரு நிறைவும் சோர்வும் ஒரே சமயம் வந்தது. திருவிழா முடிந்ததுபோல என்று சொல்லலாம். எல்லா வெண்முரசு நாவல்களுக்கும் இந்த திருவிழாத்தன்மை இருக்கிறது. ஏராளமான விஷயங்கள். பெருங்கூட்டமாக மக்கள். நிறங்களும் ஓசைகளும் கலைகளும் கொண்டாட்டமும் எல்லாம் உள்ளது. முடிந்த பிறகுதான் ஒவ்வொன்றாக நினைத்து என்ன என்ன என்று யோசித்து முடிவெடுக்கவேண்டியிருக்கிறது

அம்பையின் முதல்கனல் சிகண்டியிலே ஊறியதைப்பற்றியது முதற்கனல் நாவல். அதற்குப்பிறகு துரியோதனும் கர்ணனும் துரோணரும் ஏகைலைவனனும் அடுத்தடுத்த கனல்கள் என்று காட்டியது வண்ணக்கடல். பிரயாகையி பெரிய கனலாக சகுனி வருகிறார். ஆனால் உண்மையான கனல் என்பது திரௌபதிதான். முதற்கனல் பெருங்கனலாக மாறிவிட்டிருக்கிறது

திரௌபதியின் குணச்சித்திரம் அற்புதம். அவள் காட்டை தீவைப்பதைத்தான் இனி அவளைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்ளப்போகிறேன் என்று நினைக்கிறேன்


எஸ்.பிரபாகர்