Sunday, February 15, 2015

தேவியும் மாயையும்



ஜெ

இன்றைக்கு வெண்முரசில் அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் இடையே உள்ல உறவைப்பற்றி நினைத்துக்கொண்டேன். மனம் நிலைகொள்ளாமலேயே இருந்தது. அர்ஜுனனை காமுகன் என்று தெரிந்திருப்போம். அதைக்காட்டுவதற்காகத்தான் இதெல்லாம் என்று சொல்லலாம். ஆனால் எனக்கென்னவோ அதற்கும் அப்பால் ஒரு அர்த்தம் இருக்கும் என்ற எண்ணம்தான் வந்தது

அர்ஜுனன் மாயையுடன் உறவுகொள்வதை நான் நுணுக்கமான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டேன். அர்ஜுனன் திரௌபதியின் மாயாபிம்பத்துடன் தான் உறவுகொள்கிறான். பெண் என்னும் மாயையுடன் உறவுகொண்ட பிறகுதான் நேரடியாக பெண்ணை அணுகுகிறான் என்று எடுத்துக்கொள்ளலாம்

ஆனால் அதைவிட முக்கியமானது  அதை ஏதோ ஒரு தாந்திரிக் அர்த்தம் கொள்வது. தேவியை அறிவதற்கு முன்னால் மாயையை அறிகிறான். மாயை தேவியின் வேலைக்காரி. பெருந்தோழி. ஆனால் அதற்கு மேல். மாயை இன்னும் கொஞ்சம் கனிந்த தேவி. மாயை தேவியை மகிழ்ச்சியில்தான் ஆழ்த்துவாள் என்று தெரிகிறது

சண்முகம்