Wednesday, March 25, 2015

கல்யாணன்



ஜெ சார்

கிருஷ்ணன் நகர்புகும் காட்சியை மீண்டும் வாசித்தேன். ஒருபக்கம் ராஜதந்திரம். அவன் தனக்குள்ள மக்கள் ஆதரவைக் காட்டுவதற்கென்றே கொஞ்சம் தாமதமாக காலையில் உள்ளே வருகிறான்

அது ஒருபக்கம் என்றால் அவனை பெண்கள் பார்க்கும் இடத்தில் கதை மெல்ல மேலே சென்று கவிதையாக ஆகிவிடுகிறது. பெண்களின் நாணம் என்பது ஒரு ஆடை போல. அதை அவிழ்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள் . அதை வைத்து அழகும் செய்துகொள்கிறார்கள் என்ற வரிகள் அழகு

அதேபோல நாணமில்லாதவன் சின்னப்பிள்ளை போன்றவன் அதேசமயம் அருவருப்பையும் எழுப்பாதவன் என்றால் அவனே மிகச்சிறந்த காதலன் என்ற வரி

அந்த பகுதியை வாசித்தால் கல்யாணகோலாகலனை ஒரு சாமானிய புத்தியால் அளவிடமுடியும் என்று தோன்றியது

சாரங்கன்