Thursday, March 26, 2015

காய்கள்


அன்புள்ள ஜெமோ

பகடை அற்புதமான அத்தியாயம். அறிஞன் நிபுணர் என்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையே சலிப்புதான். ஏனென்றால் இங்கே நடக்கும் ஒவ்வொன்றும் ஒரேமாதிரி திரும்பத்திரும்ப நடக்கின்றது. அர்த்தமே இல்லை. அப்படி நினைத்துக்கொன்டிருந்தால் பெரிய அலைபோல அழிவோ விபத்தோ வந்து சகல அலுப்பையும் அழிக்கிறது. பிரபஞ்சநாடகத்தையே அந்தப் பகடையாட்டம் காட்டிவிடுகிறது ஆச்சரியமாக இருக்கிறது.

சகுனி ஆண்டவனுடன் தான் பகட ஆடிக்கொன்டிருக்கிறான். அவனுடைய வாழ்க்கையின் மிக உச்சகட்டமான இடம் இது. ஆனால் அதை அவனால் உணரவே முடியாது என்பது உண்மை. ஏனென்றால் எந்த ஆணவத்தால் அவன் அந்த வாயிலை கடைசியாக மூடி வைத்திருக்கிறாரோ அந்த ஆணவமே அவர் உள்ளத்தை  நிறைத்திருக்கிறது

காய்கள் விதவிதமாக உருவம் பெறுவதை சகுனி தன்னுடைய பேரறிவால் எல்லைக்குட்பட்டதாக ஆக்கியிருக்கிறார். எனென்றால் ஞானம் எல்லைக்குட்பட்டது. ஆனால் அவன் குழந்தையின் அறியாமையுடன் விளையாடுகிறான். அது எல்லைக்கு அப்பாற்பட்டது. முடிவற்றது. குழந்தையே தெய்வம் ஞானம் அதன் முன் சிறிய துளி


செல்வம்