Thursday, March 12, 2015

சாத்யகியும் பூரிசிரவஸும்




அன்புள்ள ஜெ சார்

பூரிசிரவஸின் கதை முடிந்து இன்றைய அத்தியாயத்தில் சாத்யகியை வாசித்ததுமே என் மனம் அதிர்ந்தது. சுருக்கமான கதையாக வாசித்த இருவருக்கும் இடையேயான பகையை நினைத்துக்கொண்டேன். இரண்டு மாவீரர்கள். இரண்டுபக்கமும் நின்று போர்செய்கிறார்கள். ஒருவன் கர்ணனையும் துரியனையும் வழிபடுகிறான். இன்னொருவனுக்கு கிருஷ்ணன் ஞானகுரு. அர்ஜுனன் வில்குரு.இருவருடைய வாழ்க்கையும் பின்னிப்பிணைந்திருக்கிறது

இருகதைகளும் இரண்டுவகையில் தொடங்குகின்றன. பூரிசிரவஸுக்கு எங்கே செல்வதென்று தெரியவில்லை. அலைமோதி அவன் பாட்டுக்கு துரியனைக் கண்டுகொண்டு அதன்பின் நட்பாகிறான். ஆனால் சாத்யகி உறுதியானவன் அவன் எங்கே செல்லவேண்டும் என்ன ஆகவேண்டும் என்றெல்லாம் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறான்

இருகதாபாத்திரங்களையும் துடிப்பான இளைஞர்களாக அறிமுகம் செய்திருப்பதே மனதை கலங்கவைக்கிறது

பாஸ்கரன்