Monday, March 23, 2015

தூதின் கணக்குகள்



ஜெ

கண்ணன் செல்லும் முதல்தூதின் கதையை வாசித்து நெகிழ்ந்துகொண்டிருக்கிறேன். கண்ணன் தூதுபோன கதையை நிறையமுறை கதைகளில் கேட்டிருக்கிறேன். ஆனால் எப்போதுமே நாமெலாம் வாழும் ஒரு மிடில்கிளாஸ் தளத்தில் வைத்தே அதைப்பார்ப்பது என் வழக்கம். இத்தனை பிரம்மாண்டமாக அதை வாசிக்கும்போது ஏற்படுகிற பிரமிப்பு பயங்கரமானது

திரௌபதி தருமன் குந்தி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோரிக்கை. எல்லாத்தையும் கணக்கிலே கொண்டு சிரித்துக்கொண்டு அனாயாசமாக அவன் செல்கிறான்

அந்த உரையாடல்களை எல்லாம் மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள். அந்த உரையாடல்களுக்குள் ஓடும் அழகுகளை எத்தனை நுணுக்கமாக எழுதியிருக்கிறீர்கள். திரௌபதியுடன் உள்ள உறவை காதல் என்பதா நட்பு என்பதா என்று சொல்வதா என்பதுதான் நுணுக்கமானது

ராஜி