Tuesday, March 24, 2015

வெள்ளைநிழல்



ஜெ,

பலராமர் விஷ்ணுவின் ஒரு அவதாரம் என்பார்கள். ஆனால் நானறிந்து புராணங்களிலே அவருக்கு எந்த பெரிய இடமும் கிடையாது. அவதார நோக்கம் என்றும் ஒன்றும் கிடையாது. அவரது குணச்சித்திரமே தெளிவாக இல்லை. புகுத்தப்பட்ட கதாபாத்திரம் மாதிரி ஆங்காங்கே வந்து போவார்

வெண்முரசின் பெரிய கொடை என்பது பலராமர் தெளிவாக உருவகி வரும் அழகுதான். ஆரம்பம் முதலே அவர் அப்படி உருவாகி வருகிறார். சின்னப்பையனாக அவர் கிருஷ்ணனுடன் விளையாடும்போதெ அவரது கதாபாத்திரம் கிருஷ்ணன் வைத்து விளையாடும் ஒரு சதுரங்கக்காய் மாதிரித்தான் இருக்கிறது. மெல்லமெல்ல வளரும்போது அந்த களங்கமில்லாத தன்மையும் கூடவே வளர்கிறது. இப்போது பெரும் பலமும் கள்ளமற்ற உள்ளமும் கொண்டவராக இருக்கிறார்

பலராமரை கிருஷ்ணருக்கு நேர் எதிர் வடிவமாக ஆக்குகிறீர்கள். கிருஷ்ணன் ராஜதந்திரி. இவர் கள்ளமற்றவர். கிருஷ்ணன் இளைஞர்களுக்குப்பிடித்தமான இளைஞன்.. இவர் இளமையிலேயே முதுமை கொண்டவர். கிருஷ்ணன் கறுப்பு இவர் வெள்ளை

பெருமாளின் வெள்ளை நிழல் என்று நினைத்துக்கொண்டேன். அதுவும் அவதாரம்தானே?”

ஸ்ரீனிவாஸன்