Friday, March 27, 2015

இளவரசியர்

ஜெ,

வெண்முகில் நகரத்தில் வரும் இளவரசிகளை கவனித்துக்கொண்டே வருகிறேன். அவர்கள் சுதந்திரமான பெண்களாகவும் சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை பற்றி அவர்களுக்கு ஒரு தெளிவு இருக்கிறது. அதோடு அத்தனைபேருக்கும் அரசியலில் ஆர்வமும் அதில் ஈடுபடும் ஆற்றலும் இருக்கிறது

கோஷாமுறை ஓரளவு இருந்தது என்பதையும் காணமுடிகிறது. ஏனென்றால் குந்தி விதவையானபிறகு கோஷாவுக்குள்தான் இருக்கிறாள். உடன்கட்டைமுறையும் அக்காலம் முதலே இருந்திருக்கிறது. பெண்களின் இடம் அரசாங்கத்துடன் பிரித்தறியமுடியாதபடி கலந்திருந்தது என்று ஊகிக்கமுடிகிறது

அந்த இளவரசிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு முகத்தையும் குணத்தையும் அளித்திருப்பதனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக நினைவிலே நிற்கிறார்கள். எனக்கு துச்சளை தான் முக்கியமானவர் என்று தோன்றியது

மனோ