Sunday, April 26, 2015

மீண்டும் வேய்குழல்

JM Sir,

இன்றைய அத்தியாயம், நீலத்தின் Synopsis.
குங்கிலியப் புகை எனைச் சூழ்ந்த அனுபவம்..
நீரில் விழுந்த குருதித்துளி...அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம்.
Like..Discovery..TIME WARP..

அந்த கணத்தை உணர எத்தனை உவமைகள்....
அந்த இசையை அவன் மட்டுமல்ல, நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் இடையே யுகங்கள் விரிந்து கிடந்தன"..
இவ்வரிகளைப் படித்தவுடன், திருப்பல்லாண்டுக்கு (நீலம்) மனம் சென்று விட்டது..

நீலம் பசுமைகொள்ளத்தொடங்கியபோது கண்விழித்தெழுந்துவந்தது பறக்கும் வேய்ங்குழல். 
இக்கணம் நீ உன் துயிலில் தாண்டிய யுகங்கள் எத்தனை என்றறிவாயா?
பிரம்மகணத்தில் அவன் பெயர் அழிந்த பின்னும் அரைக்கணம் உன் பெயர் வாழும்.


பூரிசிரவஸ் - பானுமதி உரையாடல்

காதல் தோல்வி பற்றி, ஒரு முதிர்ச்சியான...தெளிவான சம்பாஷனை..
இதைவிட சிறப்பான ஒன்றை நான் வாசித்ததில்லை..கேட்டதில்லை..பார்த்ததில்லை..




அன்புடன்,
மகேஷ் (காங்கோ).