Sunday, July 19, 2015

திருஷ்டதுய்ம்னனின் பிழையா?

திருஷ்டத்யும்னன் செய்தது தவறு அல்ல. கிருஷ்ணனின் ஆணைப்படியே கிருதவர்மனை சிறைப்பிடித்து துவாரகைக்கு கொண்டு வருகிறான். மேலும் கிருஷ்ணனின் சொற்களில் - " எந்த யாதவனும் அச்சத்துடனன்றி இந்த நாளை நினைக்கலாகாது " என்பதற்காகவே  அத்துமீறல் என நாம் நினைக்கும் கிருதவர்மனை தேரில் கட்டி வைத்து இழுத்து வரும் செயலைச் செய்கிறான். கிருதவர்மன்  பகை வீரனெனில்  வீரனுக்குரிய  மரியாதையை  அளித்திருக்கலாம் ஆனால் வஞ்சகம்  செய்தவர்களுக்கு அது பொதுவாக அளிக்கப்படாது .

ஆனால் இங்கு வியப்பளிப்பது யாதவர்களின் மனநிலையே. பாமாவின் தந்தை சத்ராஜித் கொள்ளப்பட்டு சியமந்தகம் பறிக்கப்பட்டதை பற்றி ஆரம்பத்தில் இருந்த வருத்தமும் கோபமும் மறைந்து  வஞ்சகம் செய்த அக்ரூரருக்கும் கிருதவர்மனுக்கும் மன்னிப்பளிப்பது என ஏற்படும் தலைகீழ் மாற்றம் இங்கு  கவனிக்கத்தக்கது.  அவ்வப்போது   நிகழும் நிகழ்விற்கேற்ப அவர்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள் .  சததன்வாவிற்கு விளக்கமளிக்க ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என அவையிலேயே வினவப்படுகிறது !!

இந்த மந்தை - சுயநல மனநிலைக்கும் கிருஷ்ணனுக்குமான முரணியக்கத்தின் ஒரு வெளிப்பாடு இந்த  நிகழ்ச்சி.  அருணாச்சலம் அவர்கள் சொன்னது போல் பின்னாளில் நிகழப் போகும் பிரிவிற்கான ஒரு தொடக்கம் இது.


சங்கரன்  பி