Tuesday, August 11, 2015

காலத்தின் அசைவு

// உடலசைவு காலத்தை அலகுகளாகப்பிரித்து அளவிடுவது. அளவிடப்படும் காலம் மீது ஏறி நெடுந்தூரம் செல்லமுடியாது. செய் செய் என்று அது ஆணையிடும். ஏதும் செய்யாதபோது எடைகொண்டு ஒவ்வொரு உடல்கணுமேலும் ஏறி அமரும். ஒவ்வொரு எண்ணத்துடனும் பின்னி முயங்கி இறுக்கி நெரிக்கும். //
ஜெயமோகன், பிரமாதம்! இப்படி உணராதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று நினைக்கிறேன், ஆனால் அந்த உணர்வை வார்த்தைகளாக்க நீங்கள் வர வேண்டி இருக்கிறது.

வரவர தினமும் கடிதம் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். :-)

அவதானிப்பு என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் ஏதாவது உண்டா?

அன்புடன்
ஆர்வி