Wednesday, December 16, 2015

செடியும் மலரும்

ஜெ

வெண்முரசு எப்போது வரும் என காத்திருக்கச் செய்கிறீர்கள். இந்திரநீலத்தை நான் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீலத்திற்கும் இந்திரநீலத்திற்கும் என்ன வேறுபாடு? நீலம் வரலாறு இல்லாமல் இருக்கிறது. எங்கே எவர் என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. அந்த பர்ஸானபுரிகூட சித்தரிக்கப்படவில்லை. ஆனால் இந்திரநீலம் மண்ணில் இருக்கிறது

இந்திரநீலம் செடி மரம் போல. வேரும் பூவும் இருக்கிறது. நீலம் வெறும் பூ. ஆனால் பூ என்றால் அது செடியின் கனவு அல்லவா {சீனக்கவிதை அது]

சண்முகம்