Tuesday, January 26, 2016

நுண்ணுணர்வுகள்



ஜெ

வெண்முரசின் இன்றைய அத்தியாயத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். மிகநுட்பமான பல புள்ளிகளை ஒளித்து வைத்துக்கொண்டு வேடிக்கையாகவே சென்றுகொண்டிருந்தது. நினைக்க நினைக்கத்தான் அதன் ஆழம் தெரிந்தது

எங்கோ ஓர் ஆழத்தில் துரியோதனனுக்குத் தெரிந்திருக்கிறது, கர்ணன் எவர் என்று. அதை அவன் மேன்மனம் அங்கீகரிக்க மறுக்கிறது. அதை வைத்து அவனுடைய மனம் விளையாடிக்கொண்டே இருக்கிறது

கர்ணனுக்கும் அது தெரியும். அது அங்கே சொல்லப்படக்கூடாது என்று அவன் நினைக்கிறான்

அதைவிட கர்ணனின் தந்தை சல்யன் என துரியோதனனின் மனதுக்குள் ஒரு சித்திரம் உள்ளது. முக ஒற்றுமை நினைவுக்கு வருகிறது

கடைசியாக சலியன் கர்ணனுக்குதேரோட்டவிருப்பதைப்பற்றி ஒரு பிரிமானிஷனும் அவனுக்கு இருக்கிறது

விளையாடிவிட்டீர்கள் ஜெ

சுவாமி