Saturday, March 12, 2016

மாற்றுரு



நமஸ்காரம் ஜெ.

.." வெய்யோன் "10 நாள் பின் தங்கி இருக்கிறேன். மிகுந்த நேர நெருக்கடி .. மற்றபடி இதுவரை உள்ள கர்ணன் என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளான்.முக்கியமாக 34, 35அத்தியாயத்தில் சுஜாதன் கர்ணனை நிந்திக்கும் சேடியை கறுக்கும் போதெல்லாம் உணர்வு பொங்கி குலுங்கி 
அழுதேன்..வெய்யோன்ஆரம்பமாகும் போது மெயிலில் சொல்லியிருந்தேன் கர்ணன் எனது ஆகச் சிறந்த மாற்றுரு என்று.என்னையே பல இடங்களில் உணர்ந்தேன். இந்நிலையில் 'பத்ம " விருதை தாங்கள் நிராகரித்ததும்  முற்றிலும் தங்கள் சுதந்திரத்துக்கு பொருத்தமானதே.. மற்ற உங்களின் கட்டுரைகளையும் தொடர்ந்து வருகிறேன்..

வெய்யோனை முழுவதும் முடித்து விட்டும் தங்களிடம் பகிர்கிறேன். ஒரு படைப்பு வாசிப்பாளனின் புரிந்துகொள்ளும் தன்மையை மேம்படுத்தி, அவனது தரிசனத்தை விஸ்தரிக்க இடம் தரவேண்டும். மேலும் அவனது "அக விழிப்பை"தூண்ட வேண்டும். வெண்முரசு அதை சரியாக செய்கிறது.தொடரட்டும் உங்கள் சிறந்த பணி..
எண்ணெய் தேய்ப்பது உடல்தன்மையையும், உள நிலையையும் சரிப்படுத்தி, மெருகூட்ட கண்டிப்பாக உதவி செய்யும்.

நமது மெய்ஞானவியலுக்கும், ஐரோப்பிய தெரிவுக்கும் ஆன இடைவெளியை இதுவே கட்டியம் கூறுகிறது.

இன்று மஹா ஷிவராத்திரி இன்று நீங்கள் இரவு விழித்திருந்தால் இவ்விரவு உயர்ந்த பல சாத்தியங்களை வழங்கும் இரவாக அமையட்டும். நல்ல உடல் நலத்தை பெற்று வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றி!

எஸ்