Monday, April 25, 2016

முக்தி



ஜெ

சிசுபாலனின் மனநிலையை உளவியலில் முக்கியமான ந்றாகச் சொல்வார்கள். தற்கொலைசெய்துகொண்டவர்களின் வாழ்க்கையை பின்னர் அவர்கலுடைய கடிதங்கள் டைரி மற்றும் நண்பர்களின் பேச்சுக்கள் வழியாகப்பார்த்தோமென்றால் ஒன்று தெரியும். அவர்கள் இளமை முதலே தற்கொலைக்கான நாட்டத்துடன் இருப்பார்கள். அங்கே தான் வந்துகொண்டிருப்பார்கள் . அந்த இடத்தை எல்லா வகையிலும் உணர்வுபூர்வமாக நெருங்க முயல்வார்கள். அதையே பேசியிருப்பார்கள்

அதைத்தான் சிசுபாலனும் செய்கிறான். அவன் செய்யப்போவது ஒரு தற்கொலை அவன் கிருஷ்ணன் முன் தலையறுபட்டு செத்து விழுகிறான். அதை அவன் சப்கான்ஷியஸ் அறியும். அதைநோக்கி அவன் மூர்க்கமாகச் சென்றுகொண்டே இருக்கிறான். அவனுக்கு அதில் பெரிய ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

அதுவும் ஒருவகை மீட்புதான். முக்தியை நோக்கித்தானே செல்கிறான்?

சாரங்கன்