Tuesday, April 26, 2016

இரு காவியங்கள்



ஜராசந்தன் "எனக்கு தென்கடலென அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது" என்கிறான். பாரதவர்ஷம் முழுதாளும் ஒன்றே அவனுக்கு உவக்கிறது. அத்தனை வலிமையான அரசனுக்கு அவ்வெண்ணம் ஏற்படுவதும் இயல்பே. ஆனால் நேத்ரரின் காவியம்போல் இலைநுனியிலிருந்து சொட்டும் நீராக ஆவதே அவனுக்கு வாய்க்கிறது. ஒட்டுமொத்த மகாபாரதக்கதையில் அவனுக்கான இடம் அவ்வளவே.

உண்மையில் காப்பியம் தொடங்கும்போது இருக்கும் நிலையை நோக்கும் (கதை தெரிந்திராத) வாசகன் ஒருவன் அஸ்தினபுரிக்கும் மகதத்துக்கும் போர்நிகழும் என்றே எதிர்நோக்கியிருப்பான். பல்லாண்டுகளாக பாரதவர்ஷத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த இருநாடுகள் அஸ்தினபுரியும் மகதமும் மட்டுமே. அத்தகைய நிலையிலிருக்கும் மகதம், அதாவது காவியமரபில் வியாசனைப்போல் ஆகத் தகுதிகொண்ட மகதம், நேத்ரரின் காவியம்போல் சுருங்கவுள்ளது.

திருமூலநாதன்