Friday, July 15, 2016

குந்தியின் கண்ணீர்






ஜெ,

வெண்முரசு வரிசையில் வெண்முகில்நகரம் ஒரு முக்கியமான நாவல். அதில்தான் திரௌபதியின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்துவருகிறது. பலநுணுக்கமான இடங்கள் வருகின்றன
ஆனால் ஒரு இடம் முக்கியமானது. அதை ஒருநாள் தற்செயலாக நினைத்துக்கொண்டேன். உடனே தேடி எடுத்துவாசித்தேன். அந்த நுட்பம் எனக்கு நினைக்கநினைக்க ஆச்சரியமூட்டியது.

மருமகள் வரும்போது மாமியார் அடையும் உணர்வுதான் அது. அதேபோல இளம் பெண்கள்  மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் அம்மாக்கள் பார்க்கும் ஓர் இடத்தை லியோ டால்ஸ்டாய் எழுதியிருப்பார். முதிய பெண்கள் தங்களுக்கு வயதானதை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் என எழுதியிருபபர்

வெண்முகில்நகரத்தில் குந்தியும் விதுரரும் சந்திக்கும் இடம். அதில்குந்தி அழுகிறாள். ஏன் அழுகிறாள் என்பது மர்மம். அவள் சாதாரணப்பெண்ணாக மாறி அழுகிறாள். அவளுக்கு அவர்மேல் இருந்த காதலே காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்

திரௌபதிதான் காரணம் என இப்போது தோன்றுகிறது. தனக்கு காலம் போய்விட்டதை உணர்வதுதான் காரணம். அவள் வாழாமல் போய்விட்ட ஒருபெண் அல்லவா? 

அகிலா