Tuesday, August 16, 2016

வரிகள்



இந்த வாரமே ஜெ சார் அற்புதமான  வாக்கியங்களை அளித்துக்கொண்டே இருக்கிறார்.

”நீங்கள் தேடுவது உங்களை தேடுவதாக”

”திசைக்கையன்- தன்னிலிருந்து எடுத்து தன்னயே சுற்றிக்கொண்டு””

”பெருமழையை இலைகள் அஞ்சலாம். வேர்கள் மண்ணுக்குள் உவகைகொண்டு கிளர்ந்திருக்கும்”

”அன்பிலிருந்து விலங்குகளுக்கு விடுதலையே இல்லை என்பார்கள். அன்பை அறுக்கத் தெரிந்த ஒரே உயிர் மானுடனே”

”தெய்வங்கள் சடங்குகளில் சிறைப்பட்டிருப்பவை”

”காடு அளிக்கும் தெளிவுகளுக்கு முடிவேயில்லை.”

”அறியமையே துயர் அறிவதொன்றே அதற்கு மருந்து”

நினைத்து நினைத்து பார்த்துக்கொண்டேயிருகிறேன் இவற்றைப் போன்ற பலவற்றை.
மிக அதிகம் என் மனதில் இருப்பது தருமருக்கும் திரொளபதிக்கும் இடையேயான ஒரு பூசலில் தருமர் அவள் உடல் மொழியிலிருந்தே அவள் நிலையையும் அடுத அவளின் செயல்பாட்டையும் கணக்கிடுவது!!!! அத்தனை துல்லியம்.

லோகமாதேவி