Wednesday, August 24, 2016

வெண்முரசு மறுவாசிப்பு


அன்புடன் ஆசிரியருக்கு

நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு சில நாட்களுக்கு முன் வெண்முரசு மறு வாசிப்பைத் தொடங்கியிருந்தேன். நான்கு வாரங்களில் பிரயாகை வரை வாசித்து முடித்திருக்கிறேன்.
முதன்முறையாக வெண்முரசு வாசித்தபோது மகாபாரதத்தை அறியும் ஆவலே மேலோங்கியிருந்தது. நான் அறிந்தவற்றுக்கும் வெண்முரசுக்குமான தூரத்தை அளந்தே சலித்து விட்டிருந்தேன். மேலும் பல அத்தியாயங்களை தொடர்புபடுத்திக் கொள்ளவும் முடியவில்லை. உங்களுடைய முதல் திறனாய்வு நூலான "நாவல் கோட்பாடு" நல்ல திறப்பினை அளித்தது. அதன்பிறகு வாசித்த எதிலும் வாசிக்கும் வரியைத் தவிர பிறவற்றில் கவனம் ஊன்ற முடியவில்லை. விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவைக்குப் பிறகு நான் மறு வாசிப்பு செய்யும் அடுத்த நூல் வெண்முரசு. ஒரே வித்தியாசம் வெண்முரசு எழுதிமுடிக்கப்படவில்லை என்பதே. எனினும் முதற்கனல் முதல் பிரயாகை வரை ஒவ்வொன்றையும் தனித்தனி நாவலாகவே மறு வாசிப்பு செய்தேன்.

வெண்முரசுடனான என் மறு வாசிப்பு பிரயாகை வரை