Tuesday, August 23, 2016

தேடலின் கதை



ஜெ

மைத்ரேயியும் காத்யாயினியும் திரும்பி கார்க்கியிடம் வந்து சேர்ந்ததுதான் மிகப்பெரிய டிவ்ஸ்ட். அவர்கள் முற்றிலும் வேறு நூலை அமைத்து வேறு ஞானத்தை அமைத்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே கிளர்ச்சியாக இருக்கிறது. அது சாக்தவேதம். அந்த வேதக்கிளையை பிறர் அங்கீகரிக்கவே இல்லை. அந்தக்காடே கார்கியின் பெயரால் அழைக்கப்படலாயிற்று

ஆரம்பம் முதலே அவர்களின் வாழ்க்கையை வாசித்து ஒட்டுமொத்தமாகக் கோர்த்து எடுத்துக்கொண்டதும் பெரிய பிரமிப்பு எழுந்தது. சொல்லப்படாத ஒரு மெய்ஞானத்தேடலின் கதை இருந்தது அதுல்.

சுருக்கமான ஒரு பெரிய நாவலை வாசித்ததுபோல உணர்ந்தேன். வெண்முரசில் முன்பு இதேபோல பிருகுக்களுக்கும் ஹேகயர்களுக்குமான உறவை வாசித்தபோதும் உணர்ந்தேன். சுருக்கமான ஒரு பெரும் நாவல் மாதிரி இருந்தது.

செந்தில் ஆர்