Sunday, August 21, 2016

புனைவுமிகுந்த தருணம்





ஜெ

இன்றைய வெண்முரசின் புனைவுமிகுந்த தருணம் என்பது யாக்ஞவல்கியர் பிருகதாரண்யகத்திற்குள் வருவதும் போவதுமான இரு சந்தர்ப்பங்கள். அவர் வரும்போது அந்த பெருங்காட்டுக்குள் ஓர் அலை உருவாகிறது. அங்கிருந்த கீரி அவரை அன்னியமாகப் பார்க்கிறது

ஆனால் அவர் செல்லும்போது மானுக்கு அவர் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. வரும்போதிருந்த ஆணவம் அழிந்துவிட்டது. அவரும் மானைப்போல ஒரு மிருகமாக ஆகிவிட்டார். அலையே எழாமல் இறங்கிச்செல்கிறார் காட்டில்

அவன் இறங்கும்போது குளத்திலே அலைகளே எழவில்லை என்று ஒரு ஜென்கவிதை நினைவுக்கு வந்தது. அந்தப்பரிணாமம் ஆழமானது

ஜெயராமன்