Saturday, August 13, 2016

பலி






அன்புள்ள ஜெ

கிருஷ்ணன் உயிர்ப்பலியை நிறுத்தியதைப்பற்றி, அது ஒரு முக்கியமான சீர்திருத்தம் என்பதை இப்போதுதான் யோசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு காலகட்டத்திலிருந்து இன்னொரு காலகட்டம் நோக்கிய ஒரு நகர்வு. இன்றைக்கும்கூட இந்தியா முழுமையாக அப்படி நகர்ந்ததில்லை

இன்னொன்று, வேள்வியில் பலிகொடுப்பதை புத்தரும் எதிர்த்தார்.  ஏசுவும் பலிநிறைவேற்றம் என்னும் கொள்கையை முன்வைத்து பலியை எதிர்த்தார். ஏசுவே ஒரு பலி

ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் இவர்கள் அத்தனைபேரும் ஏறத்தாழ ஒரே வகையான செயல்பாடுகளைத்தான் செய்தார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது

மனோகர்