Saturday, August 13, 2016

பிரம்மம்






ஜெ

இந்தத்தத்துவ விவாதங்கள் அனைத்திலுமே நேரடியாக பிரம்மம் பேசப்படுகிறது. ஆனால் அதைப்பற்றி விவாதம் இல்லை. அதுவே இருக்கிறது, ஆனால் அது வந்து முன்னால் நிற்கவில்லை. எல்லா விவாதமும் ‘அது’ பற்றியது என்பதே சொல்வளர் காட்டை அழகாக ஆக்குகிறது.

வைதிகன் யானைமேல் செல்பவன் போல. அவன் எந்த வாயிலிலும் தாழ்ந்துசெல்ல முடியாது என்று சொல்லப்படுவதுண்டு. வேதத்தின் உறுதியுடன் காவியப்பாடல்களின் நெகிழ்வுடன் ஒரு புதியவேதம் எழவேண்டும். இரும்பும் ஆடகப்பொன்னும் ஆன ஒன்று. கானகங்கள் இன்று கருவலி கொண்டு துடிப்பது அதற்குத்தான்

என்ற வரியில் இந்நாவலின் மையமே வந்துவிடுகிறது.

சங்கர்ராமன்