Friday, August 19, 2016

உண்பது வேள்வி




உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே  என்னும் வரி எனக்கு ஜே ஜே சிலகுறிப்புகளில் வரும் அரவிந்தாக்‌ஷமேனனை நினைவுபடுத்தியது. செயல்கள் அனைத்துமே மிகச்சரியாக ஒரு கலைநிகழ்ச்சி போல ஆகமுடியுமா? முடியும் என்றால் அவர் உள்ளம் அத்தகைய நிலைபேறான தன்மையை அடைந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அதை காத்யாயினி அடையாளம் கொள்ளும் இடம் முக்கியமானது

நீங்கள் ஒருமறை நித்ய சைதன்ய யதி பற்றி ஏறத்தாழ இதையே சொல்லியிருக்கிரீர்கள். அவரது சமையல் எப்படி ஒரு இசைநிகழ்ச்சி போல இருக்கும் என்று. எப்படி சின்னச்சின்ன விஷயங்களைக்கூட பிசிறில்லாமல் செய்வார் என்று சொன்ன கட்டுரையை தேடிப்பார்த்தேன். வேள்வி என்பது தன்னை கொடையளிப்பது. கொடையளித்து தெய்வங்கள் அளிப்பதை பெற்றுக்கொள்வது. தெயங்கள் அளிப்பது இத்தகைய ஒத்திசைவைத்தான்

சண்முகம்