Sunday, August 14, 2016

தனிநாவல்






ஜெ

வெண்முரசின் கதையோட்டம் சொல்வளர்காட்டுக்கு உள்ளே ஓடிக்கொண்டிருப்பதுதான் இதை மகாபாரதக் கதையாக ஆக்குகிறது. விதுரரின் மனம் குழம்புவது போன்ற இடங்கள் மிக முக்கியமானவை. மனம் எதையெல்லாம் நாடுகிறது அதை மறக்க எதையெல்லாம் நடிக்கிறது என்பதெல்லாம் முக்கியமானவைதான்

ஆனால் உண்மையில் ஒன்றைச் சொல்லவேண்டும். மகாபாரதக்கதை இல்லாமல் இந்த நாவலை எழுதியிருந்தால் இது தனியாகவே ஒரு நல்ல நாவலாக ஆகியிருக்குமே. இந்நாவலையே இந்தியாவில் வேதங்களின் பரிணாமவரலாற்றைச் சொல்லும் முக்கியமான ஒரு நாவலாக எவரிடமும் கொடுத்திருக்கலாமே

நீலம் இந்திரநீலம் இரண்டும் அவ்வாறு தனிநாவலகாவே நின்றிருக்கும் அமைப்பு கொண்டவை. இதையும் அப்படியே எழுதியிருக்கலாம்

செம்மணி அருணாச்சலம்