Sunday, August 14, 2016

யுகபுருஷன்


ஜெ

திரும்பத்திரும்ப துருவன் இந்நாவலில் வந்துகொண்டிருக்கிறான். பெரிய கொந்தளிப்பு அல்லது நிலைகொள்ளாமல் இருக்கும்போதுதான் கதாபாத்திரங்கள் துருவனைப்பார்க்கிறார்கள். இந்ந்த அத்தியாயத்திலும் தருமன் துருவனைப்பார்க்கிறான்

துருவன் எனும் தறியில் கட்டப்பட்ட பசு என சொல்லும் வரி அற்புதமானது. அதைத்தொடர்ந்து ஓடும் தருமனின்சிந்தனையில் இந்நாவல் எதிர்கொள்ளும் முக்கியமான சிக்கல் உள்ளது

 ஒவ்வொன்றும் நிலையழிந்திருக்கும் காலமொன்று இருந்திருக்கக் கூடும்.   அன்று வேதங்களை நிலைபெயராமையில் கட்டி வைத்தனர். அதில் தொடுத்துத் தொடுத்து அனைத்தையும் நிலைநிறுத்தினர்.  இன்று கட்டவிழ்ப்பதுபோல பெருஞ்செயல் வேறில்லை. வேதப்பசுவைக் கொண்டுசென்று அத்துருவனில் கட்டிய மாமுனிவர்நிரையனைத்துக்கும் நிகர் என துலாவின் மறுதட்டில் நிலைகொள்ளும் ஒருவன். ஆனால் அவனை எளிய யாதவன் என்று காட்டுகின்றது என் விழி. 

அந்தவரிகளை பலமுறை வாசித்தேன். யுகம்புரளும்போது நிகழும் பெருஞ்செயல் அது

சாம்பசிவம்