Wednesday, August 17, 2016

தர்க்கம்

 

ஜெ

இன்றைக்கு வந்த முக்கியமான வரி இது. பலமுறை வாசித்தேன்.

முற்றிலும் சீரான சொல்லொழுங்குடன் முன்வைக்கப்பட்ட அவ்வெண்ணங்கள் அவற்றின் ஒழுங்காலேயே முழுமையற்றவை என எண்ணத்தலைப்பட்டேன். உண்மையின் நடுவே ஒர் அறியமுடியாமை இருந்தே தீரும். இல்லையேல் மானுடனின் எண்ணப்பெருக்கு என்றோ நின்றிருக்கும். இன்று தொடங்கி பல்லாயிரமாண்டுகாலம் கடந்த பின்னரும் மையமானது சொல்லப்படாமலேயே எஞ்சும்

இதை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. ஒரு உண்மை எப்போதைக்குமாக இருக்கமுடியாது. இருந்தால் மானுடசிந்தனை அங்கே முடிகிறது. எவரேனும் அப்படி ஒரு உண்மையைச் சொன்னால் அதனாலேயே அது அரைகுறை உண்மை

என்ன வேடிக்கை என்றால் எப்போதைக்குமான முழுமுதல் உண்மை கிடையாது என்று சொல்வதே சார்வாகம்தான். அவர்களின் தர்க்கம் மூர்க்கமான ஒருமுனைப்பு கொண்டது. அதனாலேயே அது பொய்யாக ஆகிவிடுகிறது

சாரங்கன்