Thursday, August 18, 2016

உறவு



ஜெ,

கனவுத்தளம் காட்சிகளால் ஆனது. ஆழ்தளமோ வெறும் உணர்வுகள்.

விதுரர் மொழியால் ஆனது ஜாக்ரத் என்கிறார். ஸ்வப்னம் காட்சிகளாலும் சுஷுப்தி என்பது வெறும் உணர்வுகளாலும் ஆனது என்கிறார்

நோயில் இருந்து அதை அவர் கண்டடைந்திருக்கிறார். நோய் அவரது மொழியை அழித்தது. கனவுகளையும் நிறுத்தியது. தூய உனர்வுத்தளத்தில்  மனிதன ஆள்வது அன்பு மட்டுமே என்று கண்டுகொள்கிறார்

பற்றே இதன் இயக்கவிசை. அன்பென்று அதை சொல்கிறோம். இரக்கமென்று பிறிதொரு தருணம் கூறுகிறோம். நெஞ்சுருகாதவன் வாழ்வதே இல்லை.

என்ற அவரது கண்டடைதல் பல தத்துவக்கோணங்கள் திறக்கப்படும் சொல்வளர்காட்டுக்கு மிக முக்கியமானது என நினைக்கிறேன்

எனக்கு என்னமோ இதுவே சரி என்றும்  படுகிறத
 
சாம்பசிவம்