Friday, January 13, 2017

கிராதமுழுமை






கிராதம் மிக இயல்பாக முடிந்தது நிறைவை அளித்தது. உண்மையில் பாசுபதத்தை அர்ஜுனன் பெற்றபோதே நாவல் முடிந்துவிட்டது. வேதங்களுக்கெல்லாம் ஆதியானது பாசுபதம். அது தொல்மக்களின் வேதம். மொழிகடந்தது. வெறும் ஒலிமட்டுமே ஆனது. அந்த ஒலிகளை அவர்கள் எங்கிருந்து பெற்றிருப்பர் என்று பார்த்தால் அது இயற்கைவேதம் என்பதை அறியமுடியும். [அதிலிருந்து எழுந்தது தமிழ் என்ற இடம் எனக்கு ஒரு பெரிய கிளர்ச்சியை அளித்தது]

வேதங்களைத்தேடிப்போன அர்ஜுனன் வேதங்களின் வேதமாகிய பாசுபதத்தை அடைந்து நிறைவடைந்தான் என்பதே மிகப்பெரிய முடிவு. அவன் திரும்பிவரும் இடமும் கிருஷ்ணனைச் சந்திப்பதும் அற்புதமானவை. பாசுபதம் என்பதை ஏன் இத்தனை சிறப்பாக நம் சிற்பங்களில் செதுக்கிவைத்திருக்கிறார்கள், அது ஒரு அம்புமட்டும்தானே என நானே நினைத்ததுண்டு. அந்த கேள்விக்கு விடைகிடைத்துவிட்டது

சண்முகம்