Tuesday, January 17, 2017

கிராதம்



திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

காளன் காளியின் இனிய பிணக்கு மிக அழகாக வந்துள்ளது.  அவர்களில் யார் பெரியவர் என்ற ஊடல் குறித்த கொம்பனின் அலுப்பு அருமை.  அதிகமாக சாப்பிடுவதற்காக திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் கொம்பன்..இவர்களும் weight conscious தான் போல..அம்மையப்பனைப் பற்றி வெண்முரசில் வரும் எல்லாப் பகுதிகளுமே ஒரு notch higher level தான்-sublime and divine.

நடராஜரின் ஊர்த்துவ தாண்டவ சித்தரிப்பு மிக நன்றாக உள்ளது. அதற்கான சண்முகவேலின் படமும் அற்புதம். ஒரு சிற்பத்தில் வரும் இரண்டு மூன்று கை/கால் positions, ஒரு dance movement-ன் பல்வேறு படிநிலைகள் photograph போல freeze செய்யப் பட்டவை தான் என பத்மா சுப்ரமணியன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  சிவ மூலி போட்டுக் கொண்டு இந்த நடராஜர் ஆடி வைத்ததை நம் குழந்தைகள் ஒன்றும் போடாமல் ஆடவேண்டியிருக்கிறது:)

கைலாய கிராமத்தில் நெருப்பைச் சுற்றி அமர்ந்தி கொண்டு ஒருவரோடுருவர் தோள் சேர்ந்து அசைவது அவ்தார்  படத்தை நியாபகப் படுத்தியது;)) வைகுண்டத்தில் நித்ய சூரிகள் இப்படித்தான் ஹா ஹூ என்ற சப்தம் எழுப்பிக் கொண்டே இருப்பார்கள் என்று கேட்டதும் நியாபகம் வந்தது. கைலாயத்தில் எல்லோரும் ஊனும் காய் கறிகளுமே சாப்பிடுகிறார்கள் -paleo diet போல..ஒவ்வொரு காயின் தோல் எடுத்து வருவதையும் குறிக்க வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தியுள்ளது அழகு.

வேங்கடத்தில் இருப்பது திருமால் தான் என ஜைமினி காலத்திலேயே முடிவாகி விட்டதா? தீக்ஷதர் சுப்ரஃமண்யேன ரக்ஷஇதோஹம் என்ற கீர்த்தனையில் வேங்கடத்தில் இருப்பது சுப்ரஃமண்யனே என்று பூடகமாக கூறுகிறார்..

நன்றி,
கல்பனா ஜெயகாந்த்