Tuesday, January 17, 2017

அம்மையும் அப்பனும்



ஜெயமோகன் அவர்களுக்கு,




மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லும்போதெல்லாம் அம்மையும் அப்பனும் திருமணம் செய்துகொள்ளும் காட்சியை பார்த்து மனமுருகுவது என் வழக்கம். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்ற வரியும் மனசில் ஓடும். அது என்ன ஒரு அழகான கற்பனை. ஆடவல்லானும் உமையும். அவர்கள் உலகின் அம்மையும் அப்பனும் அல்லவா? கிராதத்தின் மையமாக அவர்களின் கொஞ்சலும் குலாவலும் வந்தபோது கண்கள் கசியத்தான் வாசித்தேன். நன்றாக இருங்கள் . இந்த உலகம் இப்படி அழுக்கும் குரோதமும் நிறைந்ததாக இருக்கலாம். இதன் அடிப்படையைல் உள்ளது அம்மையும் அப்பனும் கொண்ட அழியாதகாதல் என நினைத்தால் இனிமைதான் மிஞ்சுகிறது

சங்கரலிங்கம், ஆசிரியர்