Thursday, April 13, 2017

அசுரர்






பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.

அசுரர் குலத்தின் மொத்த வரலாற்றையும் 'நறுக்குத்தெரித்தாற்போல்மூன்றே வரிகளில் 'விருஷபர்வனின்'இந்தப் புலம்பலின் மூலம் துல்லியமாக  புலப்படுத்தி விட்டீர்கள்!
"ஆனால்  அசுரகுலம் என்றும் ஏமாற்றப்படுவது. தன் அன்புக்காக, நெறிநிலைக்காக, பெருந்தன்மைக்காக, கொடைக்காக, அருந்தவத்திற்காக அது தோல்வியை விலையாக பெற்றிருக்கிறது. நம்பியதன்பொருட்டு முற்றழிந்திருக்கிறது. இம்முறை குருவைப் பணிந்தமைக்காக நான் தோற்கடிக்கப்படுகிறேன்இவ்வாறே இது நிகழ்ந்தாகவேண்டும், வேறொரு வகையில் நிகழமுடியாது. அதற்கு வரலாறே இல்லைஎன்றான்."

அன்புடன்,
.சேஷகிரி.

அன்புள்ள சேஷமிரி

ஆனால் அசுரர்கள் முற்றழியவில்லை. பல்வேறு அர்சர்குலங்கள் வழியாக அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் மகாபாரதம் காட்டும் வரலாறே
ஜெ