Friday, May 5, 2017

பின்னல்





சர்மிஷ்டையை பட்டமரம், சிதல்புற்று என பூரு நினைத்துக்கொள்ளும் இடத்தில் ஒரு பெரிய அதிர்வை அடைந்தேன். எதன்பொருட்டு அவர்கள் இப்படியெல்லாம் ஆகிறார்கள்? அங்கே தன் வன்மம் அடங்காமல் தேவயானி இளமையாக இருந்துகொண்டிருக்கிறாள். இவள் இவளுக்குரிய விழைவை இழந்ததனால் பட்டுவிட்டாளா? இந்த நாவல் எழுப்பும் இத்தகைய கேள்விகளைத்தேடிச்செல்லும்போதுதான் பரபரப்பான கதைக்கு அடியில் என்னென்னவோ பெருகி ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது

முக்கியமாக ஹுண்டனின் இரு மனைவிகளில் ஒருத்தி பெருந்தும் ஒருத்தி மெலிந்தும் சாகும் காட்சி நினைவுக்கு வருகிறது. எவ்வளவு பெரிய பின்னல் என்ற பிரமிப்பும் எழுகிறது

சரவணன்