Thursday, June 15, 2017

இரட்டையர் உறவு





அன்புள்ள ஜெ

சகதேவனுக்கும் நகுலனுக்குமான இரட்டையர் உறவு வெண்முரசில் ஆரம்பம் முதலே வந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். இப்போது பிரிந்து இரு ஆளுமைகளாக ஆகும்போதுதான் அவர்கள் எப்படி இணைந்திருந்தார்கள் என்பது தெரிகிறது. சகதேவனை ஞானம் கொண்டவன் என்கிறது வெண்முரசு. நகுலன் குதிரைகளுக்குரிய நுண்மனம் கொண்டவன். ஆகவே சகதேவன் எளிதாகப்பிரிந்து செல்கிறான். நகுலனால் அது இயலவில்லை. அந்த துயரம் மிக ஆழமாக வெளிப்பட்டுள்ளது

திருமலை