Wednesday, August 2, 2017

வீழ்ச்சிக்கான காரணங்கள்





அன்புள்ள ஜெமோ

வெண்முரசு இப்போது மிக வேகமாகச் செல்கிறது. இரண்டுகதை என்பது திட்டமிட்டு உருவாக்கப்படும் வேகத்தடை என்றாலும்கூட ஒவ்வொரு அத்தியாயத்தையும் காத்திருந்து வாசிக்கச்செய்கிறது.

தமயந்தியும் நளனும் அடையும் வீழ்ச்சி கலியால் என்று சொல்லலாம். ஆனால் தமயந்தியின் ஆணவமும் நளனின் தாழ்வுணர்ச்சியும்தான் அந்த வீழ்ச்சிக்கான காரணங்கள் என நினைக்கிறேன். நளனை தமயந்தி உள்ளூர பொருட்படுத்தியதே இல்லை. அவனை ஒரு கருவியாகவே நினைக்கிறாள். அவளுடைய உள்ளூர உள்ள ஆசை சக்கரவர்த்தினியாக ஆகவேண்டும் என்பதே.

அதைத்தான் அவள் கார்க்கோடகனுடன் கொண்ட உறவு வெளிக்காட்டுகிறது. கார்க்கோடகன் அவளுக்கு நீரின் ஆழத்திலே காட்டிய உலகம் அந்த ஆசைகாட்டல்தான். அவனுக்கு அடிமைப்பட்டாள். அவனால் ஆட்டிவைக்கப்படுகிறாள். அதிலிருந்து அவள் மீண்டால்தான் அவளால் நளனை புரிந்துகொள்லமுடியும் என நினைக்கிறேன்

எஸ்.பாலகிருஷ்ணன்