Wednesday, August 23, 2017

விராடரின் குணச்சித்திரம்






அன்புள்ள ஜெ


விராடரின் குணச்சித்திரம் மிக நன்றாகத்தெரிந்த ஒருவர் போல இருக்கிறது. அவர் வேறு எவரும் அல்ல. என் அப்பாதான். அவருக்கு பையன் உருப்பட்டுவிடவேண்டும் என்ற ஆசை. ஆகவே கரித்துக்கொட்டுகிறார். அவன் ஒருவழியாக உருப்படதும் பெருமிதமும் நிம்மதியும் கொண்டு அழுகிறார். பீத்திக்கொள்கிறார். ஆனால் அவன் நிமிர்ந்து வருவதைக்கண்டதும் ரொம்ப மேலேப் போய்விடக்கூடாது என நினைக்கிறார். 

சபையில் உளறக்கூடாது என்று உத்தரரிடம் அவர் சொல்லும் இடத்திலே வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். படையை எதிர்கொண்டுப் பேசியிருக்கிறார் உத்தரர். போரில் வென்றுவந்திருக்கிறார். இதெல்லாம் இவருக்குச் சுட்டுப்போட்டாலும் கைவராது. ஆனால் தந்தை ஆயிற்றே. ஆதலால் டம்பமாகப் பேசுகிறார். நீ பழைய உத்தரர்தான் ரொம்பத் துள்ளாதே என்றுச் சொல்கிறார். ஆச்சரியமான குணச்சித்திரம்

ராஜசேகர்