Saturday, August 5, 2017

ஆணவம்


 

 

ஜெ,


கதாபாத்திரங்களின் குரலையும் மீறி அவ்வப்போது வெண்முரசில் எழும் சில வரிகள் அந்த நாள் முழுக்க தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நினைக்க நினைக்க அவை வளரும் அப்படி ஒரு வரி இன்று திரௌபதி சொல்வது “ஆணவம் அற்றோர் அறத்தில் நிற்பதில்லை.”


 


அறத்தோர் அடக்கமானவர்களாகவும் பணிவானவர்களாகவும்தான் இருப்பார்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால் அவர்களுக்குள் நான் அறத்தில் நிற்கிரேன் என்னும் ஆணவம் வேண்டும். அறச்செல்வர்கள் பலர் என்னுடன் தெய்வம் உண்டு என்று சொல்வது இந்த ஆணவத்தால்தான்


 


சுவாமி