Sunday, August 27, 2017

அதலபாதாளம்






ஜெ
புஷ்கரனின் கதாபாத்திரத்தின் சீரான வீழ்ச்சி ஆச்சரியமானது. கள்ளமற்றஒரு நிலையில் இருந்து அதலபாதாளம் நோக்கிச் செல்கிறான். அவனுடைய பிரச்சினைதான் என்ன? அவன் ஆசைப்படுவது ஒரு வீரனின் வாழ்க்கையையும் புகழையும். அதற்கு அவனுக்குத்தடையாக இருப்பது அவனுடைய அந்த கள்ளமில்லாத தன்மையும் கோழைத்தனமும். அதை அவன் நேருக்குநேர் சந்தித்து ஜெயித்திருக்கவேண்டும். உத்தரனுக்கு கிடைத்ததுபோன்ற நல்லாசிரியர் அமைந்திருந்தால் அது நடந்திருக்கும். அது நடக்கவில்லை. ஆகவே அவன் அதை தன்னிடமிருந்தே மறைப்பதற்காக நடிக்கிறான். தன்னை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடூரமாக ஆக்கிக்கொண்டு அதன் எல்லைக்கே சென்று நின்றுவிடுகிறான். பரிதாபத்திற்குரியவன் என்றுதான் சொல்லமுடியும்.

மனோகரன்