Monday, September 4, 2017

ஓர் ஆலோசனை

ஜெ

ஓர் ஆலோசனை. இதை நீங்கள் பரிசீலிக்கலாம். வெண்முரசின் முதல்நாவல் முதற்கனல். அதை வாசித்துவிட்டால் ஆர்வம் வந்து தொடர்ந்து வாசிக்கமுடியும். நான் பலபேருக்கு முதற்கனலை அளித்து வாசிக்கவைத்திருக்கிறேன். முதற்கனலை மலிவுப்பதிப்பாக முடிந்தவரை குறைந்த விலையில் வெளியிட்டால் வெண்முரசு பிற நூல்களின் விற்பனை கூடும் என நினைக்கிறேன். அதற்கு ஏதாவது ஸ்பான்ஸர்கூட தேடி அடையலாம். முதற்கனல் அதிகமானபேரிடம் சென்றால்தான் மற்ற நூல்களை விற்கமுடியும்

சரவணன்