Wednesday, October 11, 2017

எழுதழல் - காவியச் சமன்



இன்றைய அத்தியாயத்தில் நகுலன் அபிமன்யுவைப் பற்றி, “இளவயதில் ஆடையை களைந்திட்டு ஓடுவான்சற்றுவளர்ந்த பின்னரும் தருணம் அமைந்தால் ஆடையை வீசிவிடுவான்” எனக் கூறுகிறான்அபிமன்யுவைப் புரிந்துகொள்ள இதுவும் ஒரு முக்கியமான வரிஅவன் தனது இளைஞன் என்னும் ஆடையை வீசியெறிய தருணம் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்கிடைத்ததும் சிறுவன் என மாறி வம்பளக்கத் துவங்கி விடுகிறான். “போகிறபோக்கைப்பார்த்தால் எனக்கு மைந்தன் பிறந்தால்கூட என்னைவிட மூத்தவனாக இருப்பான் எனத் தோன்றுகிறது. ”, என அவன்அங்கலாய்ப்பது கூட அவ்வாறே நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பே!!

அவனை சரியாகப் புரிந்து வைத்திருப்பது அவன் தந்தை அர்ஜுனன் தான். “வளர்ந்தபின் மழலையை நடிப்பவர்கள்ஒளிந்திருந்து நம்மை வேவு பார்ப்பவர்கள்” என்று தன் மைந்தனைப் பற்றிக் கூறும் அர்ஜுனனின் அடுத்த கூற்றுஇன்னும் முக்கியமானது. “இவன் நமது குடியில் தோன்றிய பெருங்கொலையாளன்உடன்பிறந்தார் குருதியில் நீராடிஇப்பிறவிப் பணி தீர்த்து விண்ணகம் செல்லவிருப்பவன்”. உண்மையில் நெஞ்சம் திடுக்கிட்டது இவ்விடத்தில் தான்

அபிமன்யுவிடம் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து வெளிப்படும் அங்கதம் பாண்டவர்களில் பீமனுடையதுஅபிமன்யு நமக்கு முதலில் அறிமுகமாகும் பன்னிரு படைக்களத்தின் அரசவையிலும் சரிஇப்போது துருபதன்அவையிலும் சரிஅவனை ‘மைந்தன்’ என்றே அழைக்கிறான் பீமன்மேலும் அவனது கனவில் கடோத்கஜனை விடஇவனே வருவதாக உரைக்கிறான்இருவருக்கும் குணாதிசியங்களில் பல ஒத்துப் போகின்றனபோரில் வில்லேந்தியபீமனாகவே அபிமன்யு காட்சியளிக்கிறான்அனைத்திற்கும் மேல் உப கௌரவர்களோடு பாண்டவர்களில்உறவாடியது இருவர் மட்டுமே - பீமனும்அபிமன்யுவும்எனென்றால் இருவருமே குலாந்தகர்கள்!!

பீமன் நூற்றுவரைக் கொல்லப் போகிறான் என்றால்அபிமன்யு உப கௌரவர்கள் ஆயிரத்தவர்களைப் பதம்பார்க்கப் போகிறான் போல!! இப்போது அபிமன்யுவின் மரணம்அவ்வளவு வலி தருவதாக இல்லைஇதுவே காவியச்சமன்!!! இவ்வளவு இணைவுகளைச் சர்வ சாதாரணமாக நெய்த படி படர்ந்து விரிகிறது வெண்முரசு.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்