Monday, November 13, 2017

பக்திபாவங்கள்



ஜெ

கிருஷ்ணனை அறிபவர்களில் பெண்கள் மட்டுமே உண்மையானவர்கள். ஏனென்றால் அவர்களிடம் மட்டுமே கிருஷ்ணனை அறியும் ராகபாவம் இருக்கிறது.  தாசபாவம் என்பது இன்னொருவகை அர்ப்பணிப்பு.  அது அபிமன்யூ முதலியோர் கொண்டிருப்பது. இரண்டுமே  பாவபக்திக்கான மார்க்கங்கள். இரண்டுமே நம்மை விடுவிப்பவை. ஆனால் ராகபக்தி ஒரு படி மேலானது. அதில் நான் என்பது இல்லை. அது பரிபூர்ணமான அர்ப்பணிப்பு. கூடவே அதிலிருப்பது சொந்தம் கொண்டாடுதல். கிருஷ்ணனிடம் ஊடவும் பூசலிடவும் கோபிகையரால் இயலும். அது தாசர்களால் முடியாது. அந்த இரு பாவங்களுமே இந்த அத்தியாயங்களில் அற்புதமாக வெளிப்படுகின்றன

ஸ்ரீனிவாஸ்