Friday, November 10, 2017

மாயை



அன்புள்ள ஜெ

சத்யபாமை துவாரகையும் யாதவப்படையும் கிருஷ்ணனின் மைந்தர்களும் எல்லாம் மந்திரவாதி விரித்துக்காட்டும் மாயைதான் என்றும் மந்திரவாதியுடன் அவை அப்படியே மறைந்தும்போய்விடக்கூடும் என்றும் சொல்கிறாள். அன்னை என்ற மாயையே முக்கியமான மாயை என்றும் அதில் இருந்து விடுபட்டதாகவும் சொல்கிறாள்.  அவள் துவாரகைக்கு வந்தபோதே துவாரகை உப்பால் ஆனது, நுரையால் ஆனது, தற்காலிகமானது என உணர்பவள்தான் [ இந்திரநீலம்] பின்னர் அந்த மாயைக்குள் சிக்கிக்கொள்கிறாள். அதிலிருந்து விடுதலைபெற்றதும் அவள் உணார்வதும் அதைத்தான். அந்த தன்னுணர்வு எப்போதும் அவள் ஆழத்திற்குள் இருந்தது என நினைக்கிறேன்



சித்ரா